பிரபல ரியாலிட்டி ஷோவில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அக்டோபர் 4-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
இரண்டாம் நாளான இன்றே ஒவ்வொரு புரோமோக்களும் சுவாரஸ்யமாகி வருகிறது.
நேற்றைய தினம் மற்ற போட்டியாளர்கள் ஷிவானிக்கு நிறைய இதயமுறிவுகளை வழங்கினார். இந்நிலையில் அவருக்கு ஆறுதல் கூறும் சோம் “உங்களை Instaram-ல் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள், நீங்கள் இப்படி வருத்தப்படுவதை பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கூறுகிறார். இது தான் முதல் ப்ரோமோ .


இரண்டாம் ப்ரோமோவில் அறந்தாங்கி நிஷாவுக்கு “இதயம்” கொடுத்த பிறகு, அனிதா சம்பத் உணர்ச்சிவசப்பட்டு அழுவதை காண முடிகிறது. மேலும், நிஷா தனது தாயை நினைவுபடுத்துகிறார் என்றும், தனது கருமையான நிறத்தால் தாயின் தாழ்வு மனப்பான்மை பற்றி அவர் விவரிக்கிறார்.


இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன்-4க்கான புதிய ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்க்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் மோதல் வெடித்துள்ளது. அனிதா பேசும் போது எச்சில் தெறிப்பதாக சுரேஷ் சொன்னதால், இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.