புதுச்சேரி
என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் பறக்கும் படை சோதனை நடத்தி உள்ளனர்.
நாளை புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மக்களவை மற்றும் தட்டாஞ்சேரி சட்டப்பேரவை தொகுதி இடைதேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. புதுச்சேரி தொகுதியில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார்,
புதுச்சேரியில் ஏராளமான பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தகவல்கள் வந்தன அதை ஒட்டி ஐந்து தேர்தல் அதிகாரிகள் கொண்ட பறக்கும் படையினர் அவருடைய திலாள்பேட்டை வீட்டில் திடீர் நோதனை நடத்தினர். அவருடைய வீடு, கார் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனை முடிந்த உடன் வருமான வரித்துறையினரும் அங்கு வந்து விசாரணை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. சோதனையில் கிடைத்த விவரங்கள் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.