இஸ்மிர்
துருக்கி நாட்டின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகி உள்ளது.
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள இஸ்மிர் நகரில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏஜியன் கடலில் கிரீஸ் மற்றும் துருக்கி கடற்பகுதியில் கிரேக்கத் தீவான சாமோஸ் கரையில் இருந்து 13 கிமீ வடக்கு பகுதியில் 16.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவாகி உள்ளது.
இஸ்மிர் பகுதியில் 6 பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் மர்மாரா மற்றும் இஸ்தான்புல் ஆகிய பகுதிகளிலும் கிரேக்க தலைநகர் ஆன ஏதன்ஸ் நகரிலும் உணரப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பகுதிகளில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
இதையொட்டி சாமோஸ் கடற்பகுதியில் சிறிய சுனாமி ஒன்று ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு குறித்த எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.