செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘நானே வருவேன்’.

இந்த படத்தில் இந்துஜா மற்றும் எல்லி அவரம் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

பிரபு, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கும் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது.

சைக்கோ க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள இந்தப் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.