டில்லி:

க்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்படும் மட்டும் திருடப்படும் விலை உயர்ந்த மொபைல் போன்களை நேபாள நாட்டுக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்த கொள்ளைக்கும்பலை டில்லி காவல்துறையினர் கூண்டோடு அதிரடியாக கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் பெரும்பாலான குற்றவாளிகள் திருட்டு மொபைல் போன்களையே உபயோகித்து வருகின்றனர். டில்லியில் உள்ள கரோவ் பாக் பகுதியில் உள்ள கஃபார் மாட்டில் திருட்டு மொபைல் போன்கள் விற்பைன அமோகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய காவல்துறையினர், டில்லியில் கடந்த சில காலங்களாக ஏராளமான மொபைல் போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார். அப்போது கிழக்கு டில்லி பகுதியில் உள்ள ஒரு வீட்டில்  விலை உயர்ந்த திருட்டு மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அதிரடி சோதனை நடத்தியதாகவும், அங்கிருந்து ஏராளமான விலைஉயர்ந்த திருட்டு மொபைல் போன்கள்  பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறியவர், முக்கிய குற்றவாளியான நரேஷ்குமார் என்பவரிடம் இருந்து 211 மொபைல் போன்கள் பறிமுத்ல் செய்யப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். மேலும் மொத்தம்  90 ஐபோன்கள் உள்பட 311 உயர்ரக மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இதின் மதிப்பு சுமார் 60 லட்சம் என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய அதிரடி விசாரணையில், இந்த விலை உயர்ந்த திருட்டு மொபைல்கள் அனைத்தும், ஐஎம்இ எண்கள் மாற்றப்பட்டு  நேபாள நாட்டில் விற்பனை செய் யப்பட்டு வருவதாகவும், இதுபோல ஏராளமான மொபைல் போன்கள் விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.