டெல்லி
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இங்கு ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லி மாநில மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார். சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கைலாஷ் கெலாட் திடீரென ராஜினாமா செய்துள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார். டெல்லி அமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு, கட்சியில் இருந்தும் கெலாட் விலகவிருப்பதால். கைலாஷ் கெலாட், பாஜகவில் இணையக் கூடும் என்ற கூறப்படுகிறது.