அவுரங்கபாத்: அவுரங்காபாத் மாவட்டத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் 2ம் அலையால் பல மாநிலங்களில் மீண்டும் தொற்றுகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந் நிலையில், மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதையடுத்து பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடத் தடைவிதித்து மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.