டில்லி

க்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்வு குறித்து அக்கட்சி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை விதிகளின் படி மொத்த உறுப்பினர்களில் குறைந்தது 10% உறுப்பினர்கள் உள்ள கட்சி மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறும். அது போல ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தால் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். தற்போதுள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு குறைந்து 55 உறுப்பினர்கள் தேவையாகும்.

அதைப் போல் மாநிலங்கள் அவையின் 245 உறுப்பினர்களில் 10% ஆக 25 உறுப்பினர்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுகிறது. அதே நேரத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற கட்சி இரு அவைகளிலும் எதிர்க்கட்சியாக இயங்க முடியும். இரு அவைகளுக்கும் அக்கட்சி எதிர்க்கட்சி தலைவர்களை நியமிக்க முடியும்.

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அறுதி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 52 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற அந்த கட்சிக்கு இன்னும் 3 உறுப்பினர்கள் தேவைப்படுகிறது.

மக்களவை காங்கிரஸ் தலைவர் நியமனம்  குறித்து நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட சோனியா காந்தி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

சென்ற முறை மக்களவையில் காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் இம்முறை நடந்த மக்களவை தேர்தலில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.