பெங்களூரு
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவர் திவ்யா ஸ்பந்தனா டிவிட்டரில் இருந்து விலகி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவராக திவ்யா ஸ்பந்தனா பதவி வகித்து வந்தார். இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதியின் முன்னாள் மக்களவை உறுப்பினரும் தென்னக திரையுலகில் புகழ் பெற்ற நடிகையும் ஆவார். இவருடைய டிவிட்டர் பதிவுகள் பலமுறை வாசகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
தற்போதைய பாஜக அமைச்சரவையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இந்திரா காந்தி நிதி அமைச்சர் பதவியை வகித்துள்ளார். அதற்கு பிறகு நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் நிதி அமைச்சகம் அளிக்கபட்டுள்ளது. இதை ஒட்டி பலரும் நிர்மலாவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டரில், “ கடந்த 1970 ஆம் ஆண்டுக்கு பிறகு நிதித்துறைக்கு நியமிக்கப்ப்பட்ட முதல் பெண் அமைச்சரான உங்களுக்கு வழ்த்டுக்கள். தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறபாக இல்லை. நீங்கள் அதை மேம்படுத்துவீர்கள் என நம்புகிறோம். நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம்” என பாராட்டி உள்ளார்.
ஆனால அதன் பிறகு அவருடைய டிவிட்டர் கணக்கு செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது. திவ்யா ஸ்பந்தனாவின் கணக்கு நீக்கப்பட்டுள்ள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திவ்யா ஸ்பந்தனா டிவிட்டரில் இருந்து விலகியதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.