டெல்லி:  விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் செய்தது தொடர்பான  வழக்கில் கேரள மாநில காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான  சசிதரூரின் உதவியாளரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் 7வது இறுதிக்கட்ட  கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் ஜூன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதை நாட்டு மக்கள் எதிர்நோக்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் தங்கம் கடத்தல்களும் அதிகரித்துவருகின்றன.  டெல்லி விமான நிலையில்,  அரை கிலோ அளவிலான (500 கிராம்) தங்கம் கடத்தியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.  விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் சிவகுமார் பிரசாத் என்பவர்,  காங்கிரஸ் எம்பி- சசி தரூரின் தனிப்பட்ட உதவியாளர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், விசாரணையில், துபாயிலிருந்து வந்த ஒரு பயணியை வரவேற்க டெல்லி விமான நிலையத்தில் சிவகுமார் பிரசாத் இருந்தார். அப்போது அந்த பயணி தங்கத்தை சிவகுமார் பிரசாத்திடம் ஒப்படைக்கும் போது. அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த காவல்துறையினரால்  இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சசிதரூர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரச்சாரத்துக்காக நான் தர்மசாலாவில் இருக்கும்போது, விமான நிலைய வசதி உதவியின் அடிப்படையில் எனக்கு பகுதிநேர சேவையை வழங்கி வரும் எனது முன்னாள் ஊழியர் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் 72 வயதான ஓய்வு பெற்றவர், அடிக்கடி டயாலிசிஸ் செய்து வருகிறார், மேலும் கருணை அடிப்படையில் பகுதி நேர அடிப்படையில் தக்கவைக்கப்பட்டார். எந்தவொரு குற்றச் செயலையும் நான் மன்னிக்கவில்லை, மேலும் இந்த விஷயத்தை விசாரிக்கத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அதிகாரிகளின் முயற்சிகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். சட்டம் அதன் போக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நான் பிரச்சார நோக்கங்களுக்காக தர்மசாலாவில் இருந்தபோது, ​​விமான நிலைய வசதி உதவியின் அடிப்படையில் எனக்கு பகுதி நேர சேவையை வழங்கி வரும் எனது ஊழியர்களின் முன்னாள் உறுப்பினர் சம்பந்தப்பட்ட சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியை தங்கக் கடத்தல்காரர்களின் கூட்டணி என பாஜக சசி தரூரை கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “முதலில் முதல்வரின் செயலாளர் தங்கம் கடத்தலில் ஈடுபட்டார். இப்போது காங்கிரஸ் எம்பி-யின் உதவியாளர் தங்கம் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும், காங்கிரஸ் சார்பில் சசிதரூரும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.