பிரபல இந்தி நடிகை கரீனா கபூர் தனது கர்ப்பகால அனுபவங்களை தொகுத்து புத்தகம் ஒன்றை எழுதி கடந்த ஜூலை 9-ந் தேதி வெளியிட்டார்.
“பிரக்னன்சி பைபிள்” என பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தின் தலைப்பில் உள்ள “பைபிள்” என்ற வாசகம் கிறிஸ்தவ மத நம்பிக்கையை புண்படுத்துவது போல அமைந்துள்ளதாக ஆல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங் என்ற அமைப்பு மராட்டிய மாநிலம் பீட்டில் உள்ள சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.
இதுகுறித்து சிவாஜிநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்நாத் தோம்ரே “ சம்பவம் இங்கு நடக்காததால் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மும்பை சென்று புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.