சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்ன்ள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து தனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

இன்று சென்னை கொளத்தூரில் ஜிகேஎம் காலனியில் உள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 131 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார். மேலும் 150 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களும், பெண்களுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கினார்.
இதை தொடர்ந்து ஒதுவார் பணிக்கு தேர்வான மாற்றுத்திறனாளி பிரியவதனாவுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். அதனை தொடர்து பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார்
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம்.
”டெல்லிக்கு வெள்ளைக்கொடியே, காவிக்கொடியோ கொண்டு செல்லவில்லை என ஏற்கெனவே கூறிவிட்டேன். தமிழக அரசை குறை சொல்ல எதுவும் இல்லாததால், டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள நான் விரும்பவில்லை.”
என்றார்.
[youtube-feed feed=1]