நார்வே: உலகின் முதல்நிலை செஸ் வீரர் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா முதல்முறையாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நார்வே நாட்டில், நார்வே செஸ் 2024 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட தமிழக வீரர் பிரக்ஞானந்தா பல்வேறு போட்டிகளில் வென்று இறுதியாக உலகின் முதல்நிலை வீரரான நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதாவது, நேற்று (மே 29 புதன்கிழமை ) நடைபெற்ற கிளாசிக்கல் செஸ்ஸில் உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை முதன்முறையாக தோற்கடித்துள்ளார் பிரக்னாநந்தா.
நார்வே செஸ் 3வது சுற்றில் பிரக்னாநந்தா வெள்ளைக் காய்களுடன் களமிறங்கிய நிலையில், உலகின் நம்பர் ஒன் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி வலாகை சூடினார்.