மெல்போர்ன்: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 2வது போட்டி(பாக்ஸிங் டே டெஸ்ட்) நாளை மெல்போர்னில் துவங்குகிறது.
இந்திய நேரப்படி, அதிகாலை 5 மணிக்குத் துவங்குகிறது அந்தப் போட்டி. தற்போதைய நிலையில், இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் பகலிரவு போட்டியில், இந்திய அணி மோசமாக தோற்றதையடுத்து, அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் விராத் கோலி நாடு திரும்பிவிட்டதால், ரஹானே கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
ஷப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, சிராஜ் உள்ளிட்டோர் அணியில் இடம்பெறுகின்றனர். தொடரை சமன்செய்ய, இந்திய அணி இப்போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.