மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 36 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், முதல் நாளின் மூன்றாம் செஷனில் தனது முதல் இன்னிங்ஸை துவங்கியது இந்திய அணி.
கடந்த டெஸ்ட்டில் உருப்படியாக ஆடாத மயங்க் அகர்வால், இந்தமுறையும் மிட்செல் ஸ்டார்க் பந்தில் வெட்டியாக டக்அவுட் ஆனார். இவருக்கு பதில் கேஎல் ராகுலை சேர்த்திருக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது இன்னும் வலுவாகியுள்ளன.
இதனையடுத்து தற்போது ஜோடி சேர்ந்து ஆடிவரும ஷப்மன் கில் 28 ரன்களையும், புஜாரா 7 ரன்களையும் அடித்துள்ளனர்.
இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 36 ரன்களை சேர்த்திருந்தபோது, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மென்கள் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை விட வலுவான முன்னிலைப் பெற்றால், இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.