பாரிஸ்:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை சாம்பியன் பட்டம் வென்றது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்தது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடா வீராங்கனை கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி கூட்டணி -ராபர்ட் பாரா (கொலம்பியா), அன்னலெனா குரோனிபெல்டு (ஜெர்மனி) இணையை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-6, 6-2, 12 -10 என்ற செட்களில் போபண்னா இணை வெற்றி பெற்று அசத்தியது. கிரண்ட்ஸ்லாம் போட்டிகளில் போபண்ணா சாம்பியன் பட்டம் வெல்வது இதுதான் முதல் முறையாகும்
Patrikai.com official YouTube Channel