டெல்லி:
பொதுமக்கள், வணிகர்கள், டாடா பிர்லா போன்ற பண முதலைகள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை அரசிடம் திருப்பி ஒப்படைத்தால் 60சதவிகிதம் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படும் என்ற புதிய திட்டத்தை அமல் படுத்த மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகவும், ஆனால் இதை செயல்படுத்துவது  குறித்த முடிவுகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
தற்போது,  நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால் விதிமுறைப்படி, அமைச்சரவை முடிவுகளை வெளியே சொல்ல கூடாது. எனவே இதுகுறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய்  செல்லாது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த்ர். கருப்பு பணத்தை ஒழிக்கவும், கள்ளப்பணத்தை தடுக்கவுமே ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
ஆனால், இந்த செல்லாது அறிவிப்பு காரணமாக  ஏழை-எளிய மக்கள்  பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அறிவித்து 20 நாட்களாகியும் புதிய பணம் இன்னும் சரிவர புழக்கத்திற்கு வராததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
மோடியின் இந்த அதிரடி முடிவுக்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு அறிவிக்கப்பட்ட முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
ஆனாலும்,  விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட சில சேவைகளுக்கு விதிகளை தளர்வு செய்துள்ளது.
இந்நிலையில் கருப்பு பணத்தை ஒழிக்க ரொக்கமில்லாத நடவடிக்கைகளை மேம்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனாலும், அதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, இத்திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த  வியாழக்கிழமை விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கணக்கில் வராத பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் அதற்கு வருமான வரி விதிப்பதற் கான திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணத்திற்கு 60 சதவீதம் மட்டும் அபராதம் விதிக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகறிது.
மோடி ஆட்சி பொறுப்பேற்றவுடன், கருப்பு பணத்திற்கு  200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இதன் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு கருப்பு பணம் அரசுக்கு வரவில்லை. இதனால் தற்போது  அபராதத்தை குறைத்துக்கொண்டு பணத்தை திரும்ப பெறலாம் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.
balck
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபிறகு இதுவரை ஏழை எளிய மக்களுக்காக டெபாசிட் இல்லாமல் தொடங்கப்பட்ட  ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ. 21 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து  நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளின் உயர் அதிகாரிகளு டன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.
தற்போது, நடைமுறையில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், இதனால் டிஜிட்டல் கரன்சிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில்  மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்துவருகிற 28-ம் தேதி பந்திற்கு அழைப்பு விடுத்தார் மம்தா பானர்ஜி. மற்ற  எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.