புதுடெல்லி: தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு, விவசாய குழுக்களை அனுப்பி வைக்கவுள்ளதாக, டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுவதாவது, “நாங்கள் எந்தக் குறிப்பிட்ட கட்சிக்கும் வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்யப்போவதில்லை. ஆனால், பாரதீய ஜனதாவை யார் தோற்கடிப்பார்களோ, அவர்களுக்கு வாக்களிக்கும்படி எங்களின் குழுவினர் மக்களிடம் கேட்டுக் கொள்வார்கள்.
மத்திய நரேந்திர மோடி அரசு, விவசாயிகளிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதை நாங்கள் மக்களிடம் தெரிவிப்போம்” என்று அவர்கள் கூறினார்கள்.