பாட்னா:
நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகார் ஜகானாத்தில் ஒரு சிறுமியிடம் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவறான முறையில் நடந்து கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் சிலர் அதனை படம் பிடிக்கிறார்கள். சிறுமி கதறி அழும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இளைஞர்கள் சிறுமியிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்துக்கொள்கிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel