புதுடெல்லி:
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சி.வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதில், மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு பாராட்டி பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கருத்து கணிப்பால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.