மெல்போர்ன்: இந்தியாவிற்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், 195 ரன்களை மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி. அதன்படி களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் டக்அவுட் ஆனார். மேத்யூ வேட் 30 ரன்களிலும், மார்னஸ் லபுஷேன் 48 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஸ்மித் டக்அவுட் ஆனார் அஸ்வின் பந்தில்.
ஓரளவு நிலைத்து நின்ற டிராவிஸ் ஹெட் 38 பந்தில் ஆட்டமிழக்க, கேமரான் கிரீன் 12 ரன்களிலும், டிம் பெய்னே 13 ரன்களிலும் நடையைக் கட்டினர்.
கடைசிநேரத்தில் நாதன் லயன் 17 பந்துகளில் 20 ரன்களை அடிக்க, அந்த அணியின் எண்ணிக்கை 72.3 ஓவர்களில் 195 என்று ஆனது. முடிவில், அதே ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்தியா தரப்பில் பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.