மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, தேநீர் இடைவேளை வரை, 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை அடித்துள்ளது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் பும்ரா பந்தில் டக்அவுட் ஆனார். மேத்யூ வேட் 30 ரன்கள் அடித்திருந்தபோது, அஸ்வின் பந்தில் அவுட்டானார்.
மார்னஸ் லபுஷேன் 48 ரன்கள் அடித்து மிரட்டிக் கொண்டிருந்தபோது, அவரை வெளியேற்றினார் புதிய வீரர் முகமது சிராஜ். நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட் ஆக்கினார் அஸ்வின். கடந்த போட்டியிலும் ஸ்மித் ஏமாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிராவிஸ் ஹெட் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவரை பும்ரா வெளியேற்ற, தற்போது கேமரான் கிரீன் மற்றும் டிம் பெய்னே களத்தில் உள்ளனர்.
இந்தியா சார்பாக 5 பவுலர்கள் பந்துவீசி வருகின்றனர். பும்ரா மற்றும் அஸ்வினுக்கு தலா 2 விக்கெட்டுகளும், சிராஜுக்கு 1 விக்கெட்டும் கிடைத்துள்ளன.