எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் எந்தெந்த இடங்கள் பிடிக்கும்? – பகுதி 2

வீட்டில் எவ்வளவு இடம் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடத்தில் தான் நாம் அதிக நேரம் செலவு செய்ய விரும்புவோம். அவரவர் ராசியின் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் அதிகமாக நேரம் செலவு செய்ய விரும்புகிறார்கள்? என்பதை இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

சிலர் அந்த இடத்தில் அதிக நேரம் இருந்தால் தான் ஓய்வாக உணர்வார்கள். அது அவர்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கும். அப்படிப்பட்ட இடங்கள் என்னென்ன? உங்களுடைய ராசிக்கு நீங்கள் எந்த இடத்தில் அதிக நேரம் இருப்பீர்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

இன்று இரண்டாம் பகுதியில் அடுத்த மூன்று ராசிகளைக் குறித்து காண்போம்

 

கடகம்

கடக ராசிக்காரர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் இவர்கள் குடும்பத்தின் மீதும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மீதும் அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்குச் சமைப்பதில் அதிக ஆர்வமும், அக்கறையும் இருக்கும். இதனால் சமையலறையில் அதிகமாக இவர்கள் செலவிட விரும்புவார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே நேசிப்பவர்களாக இருப்பார்கள். மனதில் பட்டதைத் தயக்கமின்றி செய்பவர்களாக இருப்பதால் மற்றவர்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு இருப்பதில்லை. கண்ணாடி முன்பு அதிக நேரம் செலவிடுவதை இவர்கள் விரும்புவார்கள். அதே போல் தங்களுடைய கவலையை, மன அழுத்தத்தைக் குறைப்பதால் குளியலறையும் இவர்களுக்குப் பிடித்த இடமாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தங்களை சுற்றிய இடம் தூய்மையாக இருப்பதில் கவனமாக இருப்பார்கள். எப்போதும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் அதிக நேரம் படுக்கை அறையில் செலவிடுவதை விரும்புகிறார்கள். படுக்கையறையில் இவர்கள் பெரும்பாலும் தங்களுடைய கவலைகளை இறக்கி வைத்து விடுகிறார்கள்.