புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மகன் புல்கிட் கெஜ்ரிவால், சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வில் 96.4% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
முதல்வர் கெஜ்ரிவாலின் மகன், நொய்டாவிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார்.
அர்விந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். டெல்லியின் துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்ட பல அமைச்சர்கள் சுனிதாவிற்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடவுளின் அருள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசி ஆகியவற்றால், தன் மகன் இந்த சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார் சுனிதா கெஜ்ரிவால்.
இதற்கு முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டில், முதலமைச்சரின் மகள் ஹர்ஷிதாவும், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் 96% மதிப்பெண்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.