மும்பை

லகக் கோப்பை அணியில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் காத்திருப்போர் ஆக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் அணியில் விராட் கோலி (கேப்டன்),  ரோகித் சர்மா (துணை கேப்டன்),  சேகர் தவான், கே எல் ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாகல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமர், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மற்றும் முகமது ஷமி ஆகியோர் உள்ளனர்.

 

நவ்தீப் சைனி

அந்த பட்டியல் வெளியானதும் அதில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் உள்ளிட்டோர் இடம் பெறவில்லை என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியது. அத்துடன் இது குறித்து அம்பத்தி ராயுடு தனது டிவிட்டரில் இந்த முறை உலகக் கோப்பை போட்டியை காண 3டி கண்ணாடி வாங்க உள்ளதாக வருத்ததுடன் பதிந்திருந்தார்.

இன்று தேர்வுக் குழு வெளியிட்ட அறிவிப்பில் அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் ஆகியோருடன் நவ்தீப் சைனியும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் காத்திருப்போராக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அணியில் தேவைப்படும் போது விளையாட அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.