மும்பை:

சிறுவர்கள் துபாய்க்கு தனியாக பயணம் மேற்கொள்ள பெற்றோரின் அனுமதி கடிதம் அவசியம் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சிறுவர்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு துபாய் குடியேற்ற துறை எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து ஏர் இந்தியா மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தனியாக துபாய் செல்லும் 18 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும்.

துபாய் விமான நிலையத்தில் அவர்களை கூட்டிச் செல்ல வருபவர்களின் விபரங்கள் அதில் குறிப்பிட வேண்டும். உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் சிறுவர்கள் பயணிக்கும் போதும் அனுமதி கடிதம் கட்டாயம் வேண்டும். கடிதத்தில் விபரங்கள் சந்தேக அளிக்கும் வகையில் வகையில் இருந்தால் சிறுவர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்படும். இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது’’ என்றார்.