வதோதரா: வருகின்ற மே 23ம் தேதி, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில், நரேந்திர மோடி ‘முன்னாள் பிரதமர்’ எனும் நிலையில் இருப்பார் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல்.

அகமது படேல் கூறியுள்ளதாவது, “பாரதீய ஜனதா அரசின் கொள்கைகளால், மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்கள். எனவே, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் தேர்தலில், அக்கட்சி வெளியேற்றப்படும்.

குஜராத் மாநிலத்திலுள்ள 26 மக்களவை இடங்களில், 12 முதல் 15 இடங்கள் வரை காங்கிரஸ் வெல்லும் என்று நம்புகிறேன். பாரதீய ஜனதாக் கட்சி மக்களை பல வகைகளிலும் ஏமாற்ற முயல்கிறது. ஆனால், இந்தமுறை அவர்கள் ஏமாற தயாராக இல்லை.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், காங்கிரசின் மகா கூட்டணி சார்பில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார்” என்றார்.

– மதுரை மாயாண்டி