மலையாளத்தில் நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடித்த கூடிவிடே திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரஹ்மான் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரகுமானின் தாய் சாவித்திரி நாயர் வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனைகள் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3 :30 மணிக்கு பெங்களூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு வயது 84 .
ரகுமான் தாயாரின் இறுதிச் சடங்குகள் இன்று (வியாழக்கிழமை) காலை கேரளா, மலப்புரம் மாவட்டம் நிலம்பூரில் நடக்கும் என தெறிக்கப்பட்டுள்ளது. இவரது தந்தை கே. முகமது அப்துல் ரஹ்மான் கடந்த டிசம்பர் 2018 -ல் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.