சென்னை:
டப்பாண்டில், நடப்பாண்டில் 2வது முறைகாக முழுக்கொள்ளவை எட்டி உள்ளது  வீராணம் ஏரி. இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம், சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் போக்கி வருகிறது. நடப்பாண்டில் 2வது முறையாக  ஏரி முழுகொள்ளளவை எட்டி  கடல்போல காட்சி யளிக்கிறது. இதனால், அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மட்டுமின்றி சென்னைவாசிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம்   தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இதன்  காரணமாக தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் பரவலாக  மழை பெய்து வருகிறது.   தமிழகத்தில் நிலவிய வெயிலால் வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக  மழை பெய்து வருகிறது. சில  இடங்களில் இயல்பை மீறிய மழையும், சில இடங்களில் இயல்பைவிட குறைவான அளவிலும் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
வீராணம் ஏரி 16 கி.மீ நீளமும், 6 கி.மீ அகலமும் 48 கி.மீ சுற்றளவு கொண்டதாக உள்ளது. இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது. வீராணம் ஏரியை நம்பி,  கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் வாழ்ந்து வருகின்றன்ர. சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  அத்துடன் சென்னைக்கு குடிநீரும் வழங்கி வருகிறது.
கடலூர் மாவட்டத்திலும் அவ்வப்போது பெய்து வரும் மழை மற்றும் காவிரியில் இருந்து வரும் நிரின் காரணமாக,  சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரியும் தனது முழு கொள் அளவை எட்டி உள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருமுறை முழு கொள்ளவை எட்டிய நிலையில்,, தற்போதும், காவிரியில் இருந்து ஓரளவு தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் 2வது முறையாக  ஏரி நிரம்பி உள்ளது.
வீராணம் ஏரி,  தனது முழு கொள்ளளவான 47.5 அடியை எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது.