குடும்பத்தின் பசியாற்ற பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை..

 

அசாம்  மாநிலம் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த தீபக் பிரம்மா என்பவர் குஜராத்தில் கூலி வேலை பார்த்து வந்தார்.

கொரோனா காரணமாகப் பிறக்கப்பிக்க பட்ட ஊரடங்கு அவரை சொந்த ஊருக்கு விரட்டி அடித்தது.

கை இருப்பை வைத்து கொஞ்சநாள் காலம் தள்ளினார்.

குடும்பத்தில் வறுமை தாண்டவமாட ஆரம்பித்த நேரத்தில் அவரது மனைவி பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.

மனைவிக்குத் தெரியாமல், பிறந்து 15 நாளே ஆன அந்த பச்சிளம் குழந்தையை, 45 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு இரு பெண்களிடம்  விற்பனை செய்து விட்டார், பிரம்மா.

இது குறித்த தகவல் அறிந்த பிரம்மாவின் மனைவி உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பக்கத்து ஊரைச் சேர்ந்த இரு பெண்களிடம், குழந்தையை விற்றது விசாரணையில் தெரிய வந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டனர்.

 குழந்தையை விலைக்கு வாங்கிய 2 பெண்களும் , பிரம்மாவும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் அக்காள்- தங்கை ஆவர்.

வாரிசு இல்லாத, தங்கள் உறவினர், ஒருவர் குழந்தையைத்  தத்தெடுக்க விரும்பியதால், பிரம்மாவின் குழந்தையை விலைக்கு வாங்கியதாகக் கைதான பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

-பா.பாரதி