டெல்லி:
நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.  அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல தொகுதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவு காரணமாக காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஆகஸ்டு மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, தேர்தல் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக,   இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் உயர் அதிகாரிகளி, மாநில தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா காலத்தில் தேர்தல்களை நடத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, தேர்தல் ஆணைய  செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி ஷரன், நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் 8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான  தேதி விரைவில் அறிவிக்கப்படும் . தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.