சென்னை:
கந்தசஷ்டி கவசத்தை அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கறுப்பர் கூட்டம் சேனலைச் சேர்ந்த செந்தில் வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசிய வீடியோ வெளியானது. இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைத்த காவல்துறையினரின் 4 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில் வாசன் என்பவரை முதலில் போலீசார் கைது செய்தனர். பின்னர், “கந்த சஷ்டி கவசம்” குறித்து வீடியோவில் பேசிய சுரேந்தர் கைது செய்யப்பட்டார். மேலும், சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில், சோமசுந்தரம் என்பவர் அந்த வீடியோவை பதிவு செய்தவர் எனவும், குகன் என்பவர் அந்த வீடீயோவை எடிட் செய்த எடிட்டர் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை, காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பாக விசாரணைக்கு வந்தது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நிலையில், சேனலின் அட்மின்னாக இருந்த செந்தில்வாசனை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை தற்போது விசாரிக்க அனுமதி மறுத்துள்ளது.