பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு ரத்து செய்ததற்கு அம்மாநில முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது அகில இந்திய அளவில் கர்நாடக மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 76000 பேர் பாதிக்கப்பட்டு 3500க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 27000க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்தும் தற்போது 47000 பேருக்கு மேல் சிகிச்சையில் உள்ளனர். ஆயினும் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மக்களில் பலதரப்பட்டோர் கடும் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கே, ‘கொரோனா பரவுதல் கடுமையான நிலையில் இருக்கையில் பாஜக அரசு ஊரடங்கை ரத்து செய்து பெரும் தவறு இழைத்துள்ளது. அரசில் உள்ளோர் அனைவரும் பெங்களூருவை மட்டும் கவனிக்கின்றனர். மாநிலத்தின் மற்ற பகுதிகள் குறித்து யாருமே கவனிப்பதில்லை.
தற்போது எட்டு அமைச்சர்கள் கொரோனா கட்டுப்பாட்டை கவனித்து வருகின்றனர். அவர்களில் எத்தனை பேர் பிடார், காலாபுராகி, ராய்ச்சூர் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்? ஆம். பெங்களூரு ஒரு முக்கியமான அதிக மக்கள் தொகையுள்ள நகரம்தான். இங்கு கொரோனா பரவுதல் குறைந்து வருவதால் மற்ற இடங்களில் உள்ளவர்கள் இறக்கட்டும் என விடுவது சரி அல்ல.
தற்போதுள்ள பாஜக பாதிப்பைக் குறைத்துக் காட்ட அரசு பரிசோதனைகளை மிகவும் குறைத்துள்ளது. பரிசோதனை செய்துக் கொண்டோரும் முடிவுகளைப் பெற 10 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளது. குறிப்பாக நோய் பரவும் இந்நேரத்தில் மத்திய ரசு எத்தனை நிதி உதவி அளித்துள்ளது? ஒன்றுமே அளிக்கவில்லை. இதுவரை எத்தனை வெண்டிலேட்டரக்ள் பி எம் கேர்ஸ் நிதியில் இருந்து கர்நாடகாவுக்கு அளிக்கபப்ட்டுள்ள்து என எனக்கு யாரும் சொல்வீர்களா?” எனச் சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.