அமெரிக்காவின் அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அலாஸ்கா வட அமெரிக்க கண்டத்தின் தீவிர வடமேற்கில் அமைந்துள்ளது அலாஸ்கா தீபகற்பம், இங்கு இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்கா சிக்னிக்கில் இருந்து தெற்கே 75 மைல் தூரத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜி.எம்.டி. நேரப்படி 6.12-க்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், தெற்கு நகரமான சிக்னிக்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்க தேசிய டி-சுனாமி எச்சரிக்கை மையம் அலாஸ்கா கடற்கரையின் தெற்குப்பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.