திருப்பதி
இன்று முதல் திருப்பதி கோவிலில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி கோவில் ஊரடங்குக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து குறைவான நபர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கோவிலில் பணி புரியும் ஜீயர், அர்ச்சகர்கள் ஊழியர்கள், காவல்துறையினர் என 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி நகரின் 50 வார்டுகலில் 48 வார்டுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வார்டுகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் சாமி தரிசன அனுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க காவல்துறை கோரிக்கை விடுத்தது
இந்நிலையில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.