கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரம் 2 நாள் முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளில் அதை கட்டுப்படுத்த, மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் மமதா பானர்ஜி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இதனையடுத்து மருத்துவ நிபுணர்கள் சில பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதன்படி, மேற்கு வங்க மாநிலத்தில் வாரத்திற்கு இரண்டு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
அதன்படி, வாரம் 2 நாள்கள் அனைத்து அலுவலகங்களும் மூடப்படும், போக்குவரத்து சேவைகளும் முடக்கப்படும் என்றார். இந்த வாரம், முழு ஊரடங்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைமுறையில் இருக்கும்.
அடுத்த வாரம், புதன்கிழமை அதாவது ஜூலை 29ம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்படும். இதுகுறித்து வரும் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் மமதா கூறினார்.
Patrikai.com official YouTube Channel