புதுடெல்லி:
“இது ஒன்றும் சாதாரண எல்லை பிரச்சினை இல்லை சீனா நம் நாட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது. சீனா எதையும் சாதாரணமாக செய்வதில்லை அனைத்து உத்திகளையும் அவர்கள் யோசித்து செய்கிறார்கள்.

தங்கள் மனதில் அவர்கள் ஒரு வரைபடத்தை சிந்தித்து வைத்துள்ளார்கள், அதனை முன்னோக்கி அவர்கள் தங்கள் செயல்களை செய்கிறார்கள். உலகத்தை மாற்றியமைப்பதில் அவர்கள் அந்த சிந்தனையிலேயே முன்னெடுக்கிறார்கள்.

சீனா பெல்ட் அண்ட் ரோடு திட்டம் என்பது அமெரிக்காவை விட அவர்கள் வலிமையான நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் கையாளும் முறைகளில், கல்வான் , தெம்சோக் , பாங்காங் இடங்களில் நம்முடைய நிலங்களை கையகப்படுத்த வேண்டும் நம்முடைய சாலைகளை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.அதை விட பெரிதாக அவர்கள் நினைத்தால் காஷ்மீரில் பாகிஸ்தானுடன் கைகோர்த்து நமக்கு எதிராக செயல்படுவார்கள்.

ஆகவே இது ஒன்றும் சாதாரண எல்லைப் பிரச்சினை அல்ல இந்தப் பிரச்சினை மூலம் பிரதம மந்திரிக்கு அவர்கள் அழுத்தம் கொடுக்க நினைக்கிறார்கள். அவர்களுடைய அழுத்தம் மோடியின் பிம்பத்தை நேரடியாக தாக்குகிறார்கள்.  அவர்களுக்குத் தெரியும் பிரதமர் மோடி தன்னை திறமையான அரசியல்வாதி மற்றும் தன்னுடைய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கு தன்னுடைய 56 இஞ்ச் மார்பளவு பிம்பத்தை அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இதனை தான் சீனர்கள் தாக்குகிறார்கள்.


நாங்கள் சொல்வதை மோடி கேட்காவிட்டால் அவருடைய வலுவான தலைவர் என்ற பிம்பத்தை உடைப்போம் என்று கூறுகிறார்கள்.  இப்போது கேள்வி என்னவென்றால் திரு மோடி இதற்கு எப்படி பதிலடி தரப்போகிறார் என்பதுதான்?

அவர் சீனாவை நேரடியாக எதிர் கொள்வாரா , அவர்கள் விடுத்த சவாலை எதிர்கொண்டு நான் இந்திய நாட்டின் பிரதமர் நான் எனக்கு என்னுடைய பிம்பத்தை பற்றி கவலைப்படவில்லை சீனாவை நேரடியாக எதிர் கொள்வாரா அல்லது தன்னுடைய 56 ” பிம்பத்தை காப்பாற்றிக்கொள்ள பார்ப்பாரா ?

என்னுடைய கவலை நம்முடைய பிரதமர் சீனாவின் அழுத்தத்திற்கு கட்டு பட்டு விட்டார் என்பதுதான்.  சீனர்கள் நம் நாட்டின் உள்ளே ஆக்கிரமித்து உள்ளார்கள்.  ஆனால் பிரதமர் வெளிப்படையாக அவர்கள் நம் நாட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் அவர் தன்னுடைய பிம்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்கு தான் பார்க்கிறார் நாட்டைப் பற்றி அவர் கவலை படவில்லை. தன்னுடைய பிம்பத்தை காப்பாற்றிக் கொள்வதில் அக்கறை காட்டும் இந்திய பிரதமர் என்று சீனர்கள் நினைத்துவிட்டால் அவர்கள் மோடியை தங்கள் கைப்பாவையாக செயல்படுத்துவார்கள் , அதன் பின்னர் இந்தியாவின் பிரதமர் நம் நாட்டிற்கு செயல்படுபவராக இருக்க மாட்டார் .