டெல்லி:
கொரோனா பொது முடக்கம் காரணமாக ஐஐடி மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு விதிமுறை யில் தளர்வு செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ்  பரவல் காரணமாக, நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள தால், இந்த கல்வியாண்டில்  அனைத்துவித படிப்புகளும், மாணவர் சேர்க்கையிலும்  பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க வேண்டு மெனில், கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஏபி நடத்தும் ஜே.இஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அவசியம்.
ஆனால், இந்த கல்வியாண்டில்,  ‘‘ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதிவாய்ந்த மாணவர்கள், 12-ம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும்,  அவர்கள் ஐஐடியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்” என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”இந்தியா முழுவதும் ஏராளமான கல்வி நிலையங்கள் தங்களின் 12-ம் வகுப்புத் தேர்வைப் பகுதியளவு ரத்து செய்துள்ளன. இந்நிலையில், ஐஐடி மாணவர்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளை இந்த ஆண்டில் ஜேஏபி தளர்த்தியுள்ளது.’’ என்று கூறியுள்ளார்.
கொரோனா தொற்று அச்சம் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜே.இஇ மேம்படுத்தப்பட்ட தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.