திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைக்குமாறு தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாகவே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாவலர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் சிகிச்சையில் உள்ளனர். இந் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இரண்டு ஜீயர்களும், தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், ஜீயர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா பாதித்து வருவதால் தரிசனத்துக்கு தற்காலிக  தடை விதிக்குமாறு தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
போலீசின் இந்த பரிந்துரை குறித்து பரிசீலிக்கப்படும் என்று  நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகையால், திருப்பதி கோவில் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.