புதுடெல்லி: எதிர்பார்ப்பிற்கு மாறான வளர்ச்சி காரணமாக, கிழக்குப் பகுதிக்கான அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதையில், சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பணிகளை மேற்கொள்ளும் சீன நிறுவனத்தின் ஒப்பந்தம் இந்திய ரயில்வேயால் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
கான்பூர் – முகல்சராய் இடையிலான 417 கி.மீ. தூரத்தில் மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்கு அந்த சீன நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.
அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை கார்பரேஷன் ஆஃப் இந்தியா(டிஎஃப்சிசிஐஎல்), இந்த ஒப்பந்த ரத்து கடிதத்தை வழங்கியுள்ளது. ஜூலை 17ம் தேதி இந்த ஒப்பந்த ரத்து கடிதம் வழங்கப்பட்டது.
மேற்கண்ட திட்டத்திற்கான நடைமுறைப்படுத்தல் ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறது டிஎஃப்சிசிஐஎல். இந்த ஒப்பந்தம் ரூ.471 கோடி மதிப்பிலானதாகும். பீஜிங் நேஷனல் ரயில்வே ரிசர்ச் மற்றும் டிசைன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சிக்னல் அன்ட் கம்யூனிகேஷ்ன் குரூப் என்ற நிறுவனம்தான் இந்த ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தது.