டெல்லி: ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 61 புதிய எம்.பி.க்கள் வரும் 22ம் தேதி பதவி பிரமாணம் ஏற்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்பொழுது அவையில் புதிய உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வர். கூட்டம் நடைபெறாத நாட்களில், அவை தலைவர் அறையிலும் பதவி பிரமாணம் எடுத்து கொள்வது வழக்கம்.
ஆனால், இப்போது கொரோனா பாதிப்புகள் உச்சக்கட்டத்தில் உள்ளது. இந் நிலையில், ஜூன் 19ம் தேதி ஆந்திர பிரதேசம் 4, குஜராத் 4, ஜார்க்கண்ட் 2, மத்திய பிரதேசம் 3, மணிப்பூரில் 1, மேகாலயா 1, ராஜஸ்தான் 3 ஆகிய இடங்களுக்கு ராஜ்யசபை தேர்தல் நடந்தது.
இதில் வெற்றி பெற்றவர்கள் உள்பட 20 மாநிலங்களை சேர்ந்த 61 எம்.பி.க்களின் பதவி பிரமாணம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
Patrikai.com official YouTube Channel