சென்னை:
திருக்குறள் உன்னத லட்சியம் கொண்ட ஊக்குவிப்பு நூல் என்று பிரதமர் மோடி மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிப்பாடங்களில் 30சதவிகித பாடங்கள் குறைக்கப்பட் டுள்ளது.  சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 30 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ள பாடங்களில் திருக்குறளும் நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில், திருக்குறள் குறித்து பிரதமர் மோடி டிவிட் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே லடாக் எல்லை பகுதிக்கு சென்றபோது, அங்குள்ள ராணுவ வீரர்களிடம் திருக்குறளை கூறி, ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் திருக்குறள் குறித்து சிலாகித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
தமிழ் வாரப் பத்திரிகையில் ஆசிரியர் மாலன்,  பிரதமர் மோடியின் திருக்குறள்  குறித்து கட்டுரை எழுதி உள்ளார். அந்த கட்டுரையை பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அத்துடன் தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட்டில்,
திருக்குறள் உன்னத இலட்சியங்கள் மற்றும் சிறந்த உந்துதல் கொண்ட நூல், மிகவும் ஊக்கமளிக்கிறது. இது உயர்ந்த எண்ணங்களின் புதையல்,
மரியாதைக்குரிய திருவள்ளுவரின் வார்த்தைகள் நம்பிக்கையையும், வெளிச்சத்தையும்  பரப்பும் சக்தியைக் கொண்டுள்ளன.
இந்தியா முழுவதும் அதிகமான இளைஞர்கள் இதைப் படிப்பார்கள் என்று நம்புகிறேன்!
இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமரின் திருக்குறள் குறித்த பதிவுகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.