சென்னை:
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி சிகிச்சை அளிக்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதுமட்டுமின்றி மருத்துவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனையை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.