ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்வெற்ற் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாஜக தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. மாநில முதல்வர் பதவிக்கு அசோக் கெலாத் மற்றும் சச்சின் பைலட் இடையே போட்டி நிகழ்ந்தது இதில் ராகுல் காந்தி தலையிட்டு அசோக் கெலாத்தை முதல்வராகவும் சச்சின்பைலட்டை துணை முதல்வராகவும் பதவி ஏற்க வைத்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட்துக்கு எதிராகத் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளார். அவருக்கு 30 சட்டமன்ற உறுப்பினர்கள் அதர்வு உள்ளதாக கூறப்பட்டது. அதை ட்டி முதல்வர் அசோக் கெலாத் காங்கிரஸ் மற்றும் கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்திருந்தார். இதில் காங்கிரஸ் மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் 122 பேரில் 106 பேர் கலந்துக் கொண்டனர்.
மீதமுள்ள 16 பேரும் தனக்கு ஆதரவாக உள்ளதாக வீடியோ ஒன்றை சச்சின் பைலட் வெளியிட்டார். இன்று நடந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை சச்சின் பைலட் புறக்கணித்தார். இதனால் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்தும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அத்துடன் இவருடன் இருந்த விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார்.