அமைச்சரவை கூட்டத்தில் குடும்பத்திற்கு ரூ.5000, மின்கட்டம் தள்ளுபடி, செமஸ்டர் ரத்து உள்பட ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுங்கள் என்று தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கும் ஜூலை 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுஉள்ளது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு, தளர்வுகள் மற்றும், நீட் தேர்வு மருத்துவ கல்வி இடஒதுக்கீடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுங்கள் என்று தமிழகஅரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
திட்டமிடப்படாத ஊரடங்குகளால் பொருளாதாரமே நொறுங்கி, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் குடும்பத்திற்கு ரூ.5000, நகை & விவசாயக்கடன்கள் ரத்து, மின்கட்டணச் சலுகை, செமஸ்டர் ரத்து போன்ற ஆக்கபூர்வ முடிவுகளை @CMOTamilNadu எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
சென்னை: