சென்னை

மிழகத்தை கொரோனா பாதிப்பில் இருந்து காக்கத் தமிழக அரசு செய்ய வேண்டியவை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   இதில் சென்னை நகரில் பாதிப்பு குறைந்து வரும் வேளையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.  இது மக்கள் மனதில் கடும் பீதியை உண்டாக்கி உள்ளது.  இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி மற்றும் திமுக தலைவரான முக ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் முக ஸ்டாலின், ”கொரோனா தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் மக்கள் மற்றும் பொருட்கள் நடமாட்டத்தை அறவே தடை செய்யக் கூடாது.  மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.   ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ரூ.5000 வழங்க வேண்டும்.

கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தை 250 நாட்களாக உயர்த்த வேண்டும்.   அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் பொதுவான வருமான கட்டமைப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும்.   அனைத்து மக்களும் இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.