சென்னை:
சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகமானதையடுத்து கடந்த மாதம் முதல் சென்னை மாநகராட்சியின் மூலம் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட காய்ச்சல் முகாமில் 10,80,805 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது, இதில் கொரோனா தொற்று அறிகுறிகளோடு காணப்பட்ட 46,277 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 11,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி முழுவதும் இதுவரை 16,106 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் முகாம் மூலம் அண்ணாநகர் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் 49% பேருக்கு கொரோனோ தொற்று இருப்பது கண்ண்டறியப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் திருவெற்றியூர் மண்டத்தில் 10 % ராயபுரம் மண்டலத்தில் 13% தண்டையார்பேட்டை மண்டலத்தில் 15% பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணாநகர் மற்றும் பெருங்குடியில் உள்ளோருக்கு அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1759 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டதில் 78,880 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 1444 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டதில் 1,11,880 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திரு.வி.க நகர் மண்டலத்தில் நடத்தப்பட்ட 1546 காய்ச்சல் முகாமில் 1,08,672 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மணலி மண்டலத்தில் நடத்தப்பட்ட 291 காய்ச்சல் முகாம் மூலம் 23,268 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக சென்னை முழுவதும் நடத்தப்பட்ட காய்ச்சல் சோதனையில் தென் சென்னை, மத்திய சென்னையை விட வட சென்னை பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் விகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .