திருவனந்தபுரம்: கேரளாவில் 449 பேருக்கு கொரோனா உறுதியாக, ஒட்டு மொத்த எண்ணிக்கை 8,000ஐ தாண்டியது.
கேரளாவில் சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகி வருகிறது. இந் நிலையில் இன்று ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு 8,323 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,259 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2 பேர் இன்று கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதன் மூலம் ஒட்டு மொத்த உயிரிழப்பு 34 ஆக அதிகரித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel