அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஜூலை 11 ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலைமை என்ன என்பது மருத்துவமனை தரப்பில் விசாரித்த போது,’அமிதாப், அபிஷேக் இருவ ருக்கும் இப்போதைக்கு தீவிர சிகிச்சை எதுவும் தேவையில்லை. அவர்களின் நிலைமை திருப்திகரமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமையன்று, அமிதாப் பச்சன் தனது இணையதள பக்கத்தில்,’ “நான் கோவிட்19 பரிசோதனையில் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.. மேலும் குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட னர். கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக் கமாக இருந்த அனைவரும் தயவு செய்து கோவிட் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். ஆனால் எத்தனை பேர் டெஸ்ட் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.
அமிதாப் அனுமதிக்கப்பட்ட அதேநாள் இரவின் பிற்பகுதியில், அபிஷேக் பச்சன், கொரோனா வைரஸ்-பாசிட்டிவ் ஆக அவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை, “ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யாவும் கொரோனாவால் பாதிக் கப்பட்டது தெரியவந்தது. அவர்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்படு வார்கள். அதற்கான நடைமுறைகளை மருத்துவ பணியாளர்கள் செய்துள்ளனர்.