காத்மண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளம், நிலச்சரிவில் 4 நாட்களில் 60 பேர் பலியாகி உள்ளனர்.
நேபாள நாட்டில் பருவமழை தொடங்கியதன் காரணமாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. ஆகையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு உள்ளன.
குறிப்பாக மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை, வெள்ளத்தில் இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர். வீடுகளை, உடமைகயை இழந்து தவிக்கின்றனர்.
அனைவரும் பள்ளி கூடங்கள், சமூக நலகூடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த 2 சம்பவங்களிலும் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணியில் மீட்பு மற்றும் நிவாரண பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel